ஜோதி ஓட்டம்

வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தி ஜோதி ஓட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
ஜோதி ஓட்டம்
Published on

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி பத்துவார் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ஜோதி ஓட்டம் மேற்கொண்டுள்ளார். கடந்த 20-ந் தேதி இந்த ஜோதி ஓட்டத்தை தொடங்கிய ராணுவ அதிகாரி பத்துவார் 9 மாநிலங்கள் வழியாக சென்று ஜனவரி மாதம் 26-ந் தேதி டெல்லியில் நிறைவு செய்கிறார். இந்தநிலையில் நேற்று விருதுநகர் வந்த ராணுவ அதிகாரி பத்துவாரை விருதுநகர் என்.சி.சி. பட்டாலியன் அதிகாரிகளும், மாணவர்களும் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com