தனது உடலையும் கிழித்துக்கொண்டார்: சப்-இன்ஸ்பெக்டரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

சென்னை புளியந்தோப்பில் சப்-இன்ஸ்பெக்டரை பீர்பாட்டிலால் தாக்கி தனது உடலையும் கிழித்துக்கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தனது உடலையும் கிழித்துக்கொண்டார்: சப்-இன்ஸ்பெக்டரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
Published on

சென்னை புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்தவர் அப்துல் (வயது 26). இவர், குடிபோதையில் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் நின்றபடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பீர் பாட்டில் மற்றும் கத்தியை காட்டி மிரட்டினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஓட்டேரி போலீசாரிடமும் கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் பாதுகாப்புக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், தனது உடலில் பல இடங்களிலும் பாட்டிலால் கிழித்துக்கொண்டு போலீசை மிரட்டினார். ஒரு கட்டத்தில் போலீசார் அப்துல்லை மடக்கி பிடித்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com