திருவள்ளூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை செய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Published on

அக்னி நட்சத்திரம் முடிந்தும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென சில இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இதில் திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் காக்களூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. செவ்வாபேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மதியம் பலத்த இடியுடன் பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளச்சேரி, கூவம், குமாரச்சேரி, சிற்றம்பாக்கம், மப்பேடு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com