முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவை வழங்க சுற்றுலா செயல்முறை மையம்: தமிழக அரசு

உலக சுற்றுலா உச்சி மாநாடு 2026-ல் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவை வழங்க சுற்றுலா செயல்முறை மையம்: தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் முக் கிய நோக்கம், மாநிலத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து சுற்றுலாத் துறையை விரைவாக வளர்ச்சியடைய செய்வதாகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ்நாடு உலக சுற்றுலா உச்சி மாநாடு 2026 மூலம் மாநிலத்திற்கு ரூ.22 ஆயிரத்து 795 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கிய 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக முதலீட்டா ளர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதில் சுற்றுலா செயல்முறை மையம் மிக முக்கிய பங்காற்றும்.

இந்த சுற்றுலா செயல்முறை மையம் சுற் றுலா ஆணையர் தலைமையில் இணை இயக்குநர், சுற்றுலாத்துறை, பொது மேலாளர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், உதவி சுற்றுலா அலுவலர் நிலை 2. தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனத்தின் உறுப்பினர் ஆகியோருடன் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com