வார விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

வார விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
Published on

பென்னாகரம்:

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, முதலைப்பண்ணை பகுதியில் உள்ள காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

போலீசார் ரோந்து

மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். குறிப்பாக அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள் மற்றும் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com