குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
Published on

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழை காரணமாக அங்குள்ள அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. மெயின் அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை சற்று மழை குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com