தேனி கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தேனி கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து தற்போது சீராகியுள்ளது. இதனையடுத்து கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com