குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x

தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதுபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீரானதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மழை குறைந்து நீர்வரத்து சீரானதையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். மேலும் மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story