பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
பஞ்சலிங்க அருவி
Published on: 

உடுமலைப்பேட்டை,

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி ஆகிய இடங்களில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

குளிக்க அனுமதி

தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com