நாளை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

தேனி, 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். விடுமுறை காலங்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நாளைமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 43 நாட்கள் தடைக்கு பின்னர் கும்பக்கரை அருவியில் நாளை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com