குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றாலம் அருவிகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவது உண்டு. இங்கு குற்றாலம் சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து போலீசார் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், குற்றாலம் அருவிகளில் தற்போது நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com