குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித்தீர்த்த கன மழை யின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com