கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியத்திற்கு பிறகு நீர்வரத்து சீரானதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளவே இருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com