குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நேற்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழத்தொடங்கியது
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழத்தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com