குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
Published on

குற்றாலத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தெரியவில்லை. மாலையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக குளித்தனர். வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. எனவே போலீசாரால் ஒரு வழி பாதை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com