கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!
Published on

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்வர்.

விடுமுறை காலங்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 11-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com