சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தேனி,

கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சிறந்த சுற்றுலா தலம், புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் தண்ணீர் கலந்து அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com