

கன்னியாகுமரி,
குமரிக் குற்றாலம்' என்று திற்பரப்பு அருவி அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக்காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதன் காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.