குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தென்காசி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தொடர் மழையால் நேற்று முன்தினம் இரவு ஐந்தருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டு இருந்தது. நேற்று காலையில் நீர்வரத்து சீரானதால் ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டு மின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகள வில் வந்திருந்தனர்.

அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற் றில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இரவில் மலைப்பகுதி யில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் குற்றாலம் அருவிகளுக்கு படிப்படியாக நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட் டது.

இந்த அருவிகளுக்கு செல்லும் முக்கிய வழிப்பாதை முழுமையாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் புலியருவிக்கு சென்று குளித்தனர். மெயின் அருவியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com