ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
Published on

நாமக்கல்,

நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.

சுற்றுலா பயணிகள் செல்ல தடை

போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மிகவும் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டி வருகிறது. இதனால் ஆகாய கங்கை நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com