திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

திற்பரப்பு அருவியில் சாரல் மழையுடன் குளு குளு என சீசன் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீரகுளித்து மகிழ்ந்தனர்.
Published on

திருவட்டார்,

குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் பரவலாக தண்ணீர் பாய்கிறது.

இன்று விடுமுறை நாளாததால் இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்தனர். அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றைப்பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் படகு சாவாரி செய்தனர்.

அடிக்கடி சாரல் மழை பெய்தால் அப்பகுதி குளு குளு என உள்ளது. அதிக அளவில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் திறபரப்பு பகுதியில் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நாளை வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாபயணிகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com