வனவிலங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள்

முதுமலையில் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு வழங்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வனவிலங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள்
Published on

கூடலூர், 

முதுமலையில் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு வழங்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பசுந்தீவன தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், கரடிகள், மான்கள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும், மயில்கள், கழுகுகள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதுமலை பசுமை இழந்து காணப்படுகிறது.

இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வனப்பகுதி வறட்சியாக உள்ளதால் பறவை இனங்களுக்கும் உணவு கிடைப்பதில்லை. இதனால் முதுமலை சாலையோரம் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் வந்து சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

சுற்றுலா பயணிகள்

இதை பயன்படுத்தி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகள், மயில்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து வனவிலங்குகள் காத்து நிற்பது அதிகரித்து வருகிறது. கார்குடி, அபயாரண்யம், தெப்பக்காடு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் உத்தரவை மீறும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல் சட்டப்படி குற்றமாகும். உத்தரவை மீறி உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com