கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்...!

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்...!
Published on

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சீரான சுற்றுலா பயணிகள் வரத்து இருக்கிறது.

வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலாத்தலங்களான தூண் பாறை ,குணா குகை, மன்னவனூர் ஏரி, பிராயண்ட் பூங்கா மற்றும் ஏரியில் படகு சவாரி இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் கொடைக்கானலில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com