வார விடுமுறையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

வார விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வார விடுமுறையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
Published on

கன்னியாகுமரி,

வார விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் புகைப்பட கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில்ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com