விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால், அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று விடுமுறை தினம் என்பதால், அருவிகளில் மக்கள் குவிந்துள்ளனர். மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன், ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com