வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது.
வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

குவிந்த சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதைபோல ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக மலைச் சிகரத்தில் இருந்து தெரியும் ஊட்டி நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com