குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாக குளியல்

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாக குளியல்
Published on

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் சீசன்

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்யவில்லை. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

விடுமுறை நாள் என்பதால் நேற்று காலையில் இருந்தே வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

அருவிக்கரைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளிப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். மெயின் அருவி பகுதியில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை இல்லாததால் திறந்த வெளியில் அவர்கள் உடைகளை சிரமப்பட்டு மாற்றினர்.

ஏற்கனவே இருந்த அறை மீது மரம் விழுந்த நிலையில் சேதம் அடைந்திருந்தது. அதனை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com