வாரஇறுதி விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வாரஇறுதி விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் குளு, குளு சீசன் நிறைவடைந்து, பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது. இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று வாரஇறுதி விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் சாரை, சாரையாக திரண்டு வந்தனர். இதனால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளிலும், வனப்பகுதி சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் இன்று லேசான மழை பெய்தது. மேகங்கள் மலைகளின் மீது மோதி ரம்மியமான காட்சிகளை ஏற்படுத்தின. இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களோடு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் குவிந்தனர். அதேபோல் மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, பேரிஜம் ஏரி, அமைதி பள்ளத்தாக்கு. மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com