விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பக்கலை மற்றும் கோவிலின் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் ரசித்தனர்.
தஞ்சை பெரிய கோவில்
Published on

தஞ்சாவூர்,

தொடர் விடுமுறையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிந்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவில்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பக்கலை மற்றும் கோவிலின் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் ரசித்தனர். மேலும், சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com