திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இதனிடையே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேச்சுப்பாறை அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com