குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்
Published on

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் நன்றாக இருந்தது. அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஆனால் நேற்று குற்றாலம் பகுதியில் சாரல் மழை இல்லை. வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com