அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
Published on

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் அகஸ்தியர் அருவிக்கு வந்தனர். இவர்கள் அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது குழந்தைகள் அருவியில் விளையாடியதை பெற்றோர் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com