தொடர் விடுமுறை; முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு முகாமில் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டதால், யானைகள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன.
தொடர் விடுமுறை; முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் சுற்றுலா பயணிகள்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுமலையில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்துள்ளது. அங்கு தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறைகளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு காலையும், மாலையும் உணவு அளிக்கப்படுவதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே ஆயுத பூஜையை முன்னிட்டு முகாமில் உள்ள யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டதால், யானைகள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com