தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-சென்னை ரெயில்கள் பகுதியாக ரத்து

சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரெயில் மேற்கொண்ட நாள்களில் சென்னை காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ரெயில்கள் பகுதியாக ரத்து
Published on

கோவை,

ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பராமரிப்பு பணி

சென்னை அரக்கோணம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 28-ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை சென்டிரல் இன்டர் சிட்டி விரைவு ரெயில் (எண் 12680) காட்பாடி சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மேற்கண்ட நாள்களில் கோவை காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும்.

கோவை இன்டர்சிட்டி விரைவு ரெயில்

இதேபோல் இன்று முதல் 28-ந் தேதி வரை சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரெயில் (எண் 12679) மேற்கொண்ட நாள்களில் சென்னை காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் அன்றைய நாட்களில் மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com