

திருப்பூர்,
கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம்-கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை-நாகர் கோவில் (வண்டி எண்.16322) எக்ஸ்பிரஸ் நாளை (சனிக்கிழமை), 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் (சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை களில்) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை-திண் டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
பாலக்காடு டவுன்-திருச்சி (16844) எக்ஸ்பிரஸ் நாளை, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு புகலூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.