தண்டவாள புதுப்பிக்கும் பணி: சேலம் வழியாக செல்லும் 2 ரெயில் சேவையில் மாற்றம்!

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தண்டவாள புதுப்பிக்கும் பணி: சேலம் வழியாக செல்லும் 2 ரெயில் சேவையில் மாற்றம்!
Published on

சேலம் ,

ஈரோடு - சேலம் ரெயில்வே வழித்தடத்தில் மகுடஞ்சாவடி-வீரபாண்டி ரோடு ரெயில்வே நிலையம் இடையே தண்டவாள பாதையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேவையில் தாமதம்

இதன்படி நாளை (திங்கட்கிழமை), 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எர்ணாகுளம் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் 50 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இதேபோல் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 20 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர் புறப்பட்டு செல்லும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com