நல்லம்பள்ளி அருகேகற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

நல்லம்பள்ளி அருகேகற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே என்.எஸ்.ரெட்டியூர் வீராணம் ஏரி பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உழி கற்கள் ஏற்றி வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளை கண்டதும் டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து உழி கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com