மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 44). இவரும், மற்றொருவரும் சேர்ந்து தம்புரான்குளம் கண்மாய் நீர் வரத்து ஓடையில் அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் அள்ளி கடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த வழியாக ரோந்து சென்ற கூமாபட்டி போலீசார் சென்ற டிராக்டரை மறித்தனர். அப்போது அவர்கள் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றனர். இதில் சுந்தரை மட்டும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்ததுடன் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com