ஓமனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும்: சைமா வரவேற்பு

வளைகுடா நாடுகளின் 2-வது முக்கிய நாடான ஓமனுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஓமனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும்: சைமா வரவேற்பு
Published on

கோவை,

மத்திய அரசு வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகளுடன் வேகமாக செய்து வருகிறது. வளைகுடா நாடுகளின் 2-வது முக்கிய நாடான ஓமனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை கடந்த 1-ந்தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் (சைமா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 99.38 சதவீதம் பொருட்களை வரியின்றி, ஒமனுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியில் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் இந்திய ஜவுளித்துறை முக்கிய பங்கை வகிக்கும். இதற்கு முயற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, வர்த்தகதுறை மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்திய ஜவுளிப்பொருட்கள் மீது ஓமன் விதித்து வரும் 5 சதவீத வரியை முழுவதுமாக இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்படு கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய ஜவுளி கேந்திரங்களான திருப்பூர், கோவை மற்றும் கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com