வர்த்தக சங்க ஆண்டு விழா

வர்த்தக சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
வர்த்தக சங்க ஆண்டு விழா
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை வர்த்தக சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் சுதாகர் தலைமையில் வர்த்தகசங்க மகாலில் நடைபெற்றது. பொருளாளர் காசி முருகன், துணைத்தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர் ரவிராஜன் வரவேற்றார். பொதுக்குழுவில் 2023-2026-ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழுவிற்கு தொடர்ந்து 4-வது முறையாக தலைவராக சுதாகர், பொருளாளராக காசி முருகன், செயலாளராக பாபு (எ) சங்கர நாராயணன் ஆகியோர் சங்க உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2023 -ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை பாராட்டும் வகையில் ஊக்கத்தொகையை மாணவ, மாணவிகளுக்கு தலைவர் சுதாகர் வழங்கினார். இதில் துணைத்தலைவர்கள் சங்கரசேகரன், சண்முகபாண்டியன், உதவிச்செயலர் மயில்ராஜன் இணைச்செயலாளர் சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரகுராமன், தமிழரசு உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க செயலாளர் பாபு என்ற நாராயணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com