கார் மோதி வியாபாரி சாவு

சோழவந்தான் அருகே கார் மோதி வியாபாரி இறந்தார்.
கார் மோதி வியாபாரி சாவு
Published on

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று காலை சோழவந்தான் வந்து விட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே ஊரை சேர்ந்த பாண்டி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் காய மடைந்து சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து. காடுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com