

அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை இந்த ஓட்டம் நடைபெறுகிறது. எனவே நாளை இந்த வேளையில் பெசன்ட்நகர், சாஸ்திரிநகர், மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர் திரு.வி.க.பாலம், கலங்கரைவிளக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.