மோடி வருகைக்காக போக்குவரத்து மாற்றம்: எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்


மோடி வருகைக்காக போக்குவரத்து மாற்றம்: எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்
x

பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாகி உள்ள பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தையும் இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்குட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை காலையில் நடைபெறும் நிகழ்ழ்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். அங்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள். இதன் பிறகு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளை சேர்த்த அனைத்து தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள். அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி ஒன்றாக கைகோர்த்து கையை உயர்த்தி காண்பிக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் பலத்தை காட்டவும் தமிழக பாஜக தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றூம் மாலப்புரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

23.01.2026 அன்று பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் சென்னை - திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி - சென்னை மார்க்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்

* நாளை காலை 7 மணி முதல் மாலை 7 வரை சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

* திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் ஈசிஆர் வழியாக திண்டிவனம் செல்லவும், சென்னை வரும் கனரக வாகனங்கள் தி.மலை வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* காலை 11 மணி முதல் மாலை 7 வரை ஜிஎஸ்டி சாலையில் பேருந்துகள், வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஈசிஆர் வழியாக சென்னை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை - திண்டிவனம் மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது

* சென்னை - திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது

* திருப்பெரும்புதூர். ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் விழுப்புரம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

* திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

* திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர். திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு - செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.

* சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவிமங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

* கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி. காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

* திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.

* சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

* சென்னையிலிருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்

அல்லது

* வண்டலூர் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது

* கூடுவாஞ்சேரி - மறைமலைநகர் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு, திருக்கழுக்குன்றம் வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம், திண்டிவனம் வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

* சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

* விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

* விழுப்புரத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.

அல்லது

* திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்.

அல்லது

* திண்டிவனம் -கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலார் சந்திப்பு) - கீழம்பி புற வழிச்சாலை ஜிடபிள்யூடி சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

தடை இல்லை

ஜிஎஸ்டி சாலையில் நாளை (ஜன.23) பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை வழக்கம்போல் இயக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் காரணமாக போக்குவரத்து மாற்றுப் பாதை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story