சென்னை ராஜீவ்காந்தி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர்.) மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில், இன்று (செப். 23) முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று சென்னை பெருநகர போக்குவரத்து துறை போலீசார் அறிவித்துள்ளனர்.

கீதம் உணவகம் அருகே U Turn-க்கு தடை

மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், கீதம் உணவகம் அருகே U Turn செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று, அங்கு U Turn செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்.

ஸ்ரீவரம் அருகே U Turn செய்ய அனுமதி இல்லை

200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்களும், ஸ்ரீவரம் அருகே U Turn செய்ய அனுமதிக்கப்படாது.

இந்த வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று U Turn செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்.

உலக வர்த்தக மையம் அருகே மாற்றம்

கந்தன்சாவடியிலிருந்து எஸ்.ஆர்.பி. டூல்ஸ் (SRP Tools) நோக்கிச் செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் (World Trade Centre) அருகே U Turn செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று U Turn செய்து எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நோக்கிச் செல்ல வேண்டும்.

200 அடி ரேடியல் சாலைக்கு வழக்கமான நடைமுறை

பெருங்குடி மற்றும் ஸ்ரீவரம் பகுதிகளில் இருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் கீதம் உணவகம் அருகே U Turn செய்து 200 அடி ரேடியல் சாலைக்குச் செல்லலாம்.

வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வேண்டுகோள்

புதிய போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com