ஓசூர் அருகேஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர் அருகேஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்வாகன ஓட்டிகள் அவதி
Published on

ஓசூர்

கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்களூருவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 3 நாட்கள் விடுமுறை என்பதால் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கார், வேன், இருசக்கர வாகனங்களில் சென்றனர். இதன் காரணமாக ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கார்கள், பஸ்கள், லாரிகள் கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, அத்திப்பள்ளி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com