கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம்

16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பொது மக்களின் வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா 16.03.2024 முதல் 25.03.2024 வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட நாட்களில் கீழ்கண்டவாறு கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

1. ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு.ரங்கா ரோடு, சி.பி ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யூ, ஆர்.கே மடம் சாலை வழியாக சென்று கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

2. அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர்சாலை, பி.எஸ் சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4. 18.03.2024 அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 05.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் 22.03.2024 தேர்திருவிழா அன்று காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 23.03.2024 அன்று அறுபத்துமூவர் திருவிழா அன்று மதியம் 01.00 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

வாகனம் நிறுத்த தடை

18.03.2024 அதிகாரநந்தி திருவிழா, 22.03.2024 தேர்திருவிழா அன்றும் 23.03.2024 அறுபத்து மூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

வாகனம் நிறுத்துமிடங்கள்

1. கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது (100 இருசக்கர வாகனம் மற்றும் 30 கார்)

2. ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது (100 இருசக்கர வாகனம் மற்றும் 30 கார்)

3. செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் P.S. பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனம் மற்றும் 80 கார்)

4. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனம் மற்றும் 20 கார்)

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com