திண்டுக்கல்-கரூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சுரங்கப்பாலம் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-கரூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு உதவிக்கோட்டப் பொறியாளர் பாலசெந்தில் நாதன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

’திண்டுக்கல் -குஜிலியம்பாறை-கரூர் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-3ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட 3 நாட்கள் மட்டும் சுரங்கப்பாலம் வழியாக கரூர் செல்லும் வாகன ஓட்டிகள் திருச்சி சாலை வழியாக செல்ல வேண்டும்.’ என அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com