போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி- மோர்

போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி- மோர்
போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி- மோர்
Published on

பல்லடம்

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. எனவே கடும் வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் தொப்பி மற்றும் மோர் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு போலீசாருக்கு தொப்பி மற்றும் மோர் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு காலை, மாலை, இரு வேளைகளிலும் மோர், மற்றும் பழச்சாறு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் வழிகாட்டுதலின் பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா அறிவுறுத்தலின்படி போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் மற்றும் தொப்பி வழங்கப்படுகிறது. தினமும் காலை 11 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு, அதேபோல மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படுகிறது. மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com