தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்: 39 வாகனங்கள் பறிமுதல்- ரூ.1.92 லட்சம் அபராதம்

ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்: 39 வாகனங்கள் பறிமுதல்- ரூ.1.92 லட்சம் அபராதம்
வாகனங்கள் பறிமுதல்
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 39 வாகனங்களைப் பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், மொத்தம் ரூ.1.92 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீவிர வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

39 வாகனங்கள் பறிமுதல்

இந்த சோதனையின்போது, நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் என மொத்தம் 39 வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.1.92 லட்சம் அபராதம் -வழக்குப்பதிவு

மேலும், ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சோதனையில் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

X