தகாத உறவால் விபரீதம்: பெண் மற்றும் இளைஞர் தற்கொலை

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குறிஞ்சி கங்காபுரத்தைச் சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநரான சிவகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவிக்கு உதவுமாறு ஊரில் உள்ள தனது நண்பரான ஹரீஷிடம், சிவகுமார் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடிக்கடி சிவக்குமாரின் வீட்டுக்குச் சென்று வந்த ஹரீஷுடன் திலகவதிக்கு தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த சிவகுமார் மனைவியைக் கண்டித்து தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அங்கு திலகவதி தூக்குபேட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த ஹரீஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக திலகவதியின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் சிவகுமார் தரப்பு அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com